அடடா..! கவித...! கவித...! - "பிகில்" தலைப்பு குறித்து டி.ஆர் பாணியில் வாழ்த்திய நடிகர் விவேக்..!
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து விஜய்யை வைத்து மீண்டும் இயக்குநர் அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட வீரராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே அதற்கான காட்சிகளை படமாக்க பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்துள்ளது. ‘தளபதி63’ல் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர் விவேக் பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து TR பாணியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.