விஜய்யின் தெறி படத்தை பார்த்த பிறகு நான் அவரது ரசிகையாகவே மாறிவிட்டேன்..! - சொன்னது யார்..?
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'கொலைகாரன்' படம் ஏற்கனவே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே போனது.
இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதி, ரிலீஸ் ஆகும் என எதிரிபார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 7 ஆம் தேதி, ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபட்டு வரும் படக்குழுவிற்கு ஆதராவாக இருக்கிறார் படத்தின் நாயகி ஆஷிமா.
சமூக வளைத்தளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இவரிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு தளபதி விஜய் என்றும், அவருடைய தெறி படத்தை பார்த்த பிறகு நான் அவரது ரசிகையாகவே மாறிவிட்டேன் எனவும். தமிழ் சினிமாவின் குழந்தை தனம் நிறைந்த குழந்தைகளும் ரசிக்க கூடிய நடிகர் விஜய் எனவும் கூறியுள்ளார்.