தளபதி பிறந்தநாளின் காமன் Dp இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதா..? - வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். தற்போது, தளபதி 63படத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
கால் பந்தாட்ட விளையாட்டை கருவாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய் பிறந்தநாள் கொண்டாடத்தின் ஒரு பகுதியான காமன் Dp-யை நேற்று இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.
பெரும்பாலான விஜய் ரசிகர்கள் தங்களது Dp-யில் இந்த புகைப்படத்தை வைத்துவிட்டனர்.
இந்நிலையில், இந்த புகைப்படத்தின் டிசைன் காப்பி அடிக்கப்பட்டது என்று இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.