இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் NGK - போட்டு உடைத்த முன்னணி நடிகர்..!
வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி
இயக்குனர் செல்வராகவன். மிகவும் அட்வான்ஸாக இவரது திரைப்படங்கள் இருப்பதால்
அவை ரசிகர்களிடையே சென்று ரீச் ஆவதற்கு சில காலம் எடுக்கும்.
புதுப்பேட்டை
படத்தை தற்போது தான் அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த
வகையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் தான் NGK.
சூர்யாவின்
நடிப்பில் வெளியாகியிருந்த இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலா சிங்
நடித்திருந்தார். படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பாலா சிங் கூறுகையில்,
இப்படத்தில் நடித்த போது புதுப்பேட்டையில் தெரிந்த பாலா இந்த படத்தில் எந்த
இடத்திலும் தெரிய கூடாது, புதுசாக தெரியணும் என்று சொன்னார், செல்வராகவன்.
அவர் என்ன சொல்லி கொடுத்தாரோ, அதை மட்டும் செய்தேன்.
புதுப்பேட்டை-2
மாதிரிதான் இந்தப் படம் என்று சொன்னார், அப்படித்தான் NGK வந்திருக்கு.
படத்தில் என் கெட்டப் எம்.ஜி.ஆர் சாயல் இருக்கணும் என செல்வராகவன்
சொல்லியிருந்தார். அதனால்தான், அதேமாதிரி கண்ணாடி, தொப்பி எல்லாம்
போட்டுக்கிட்டேன் என்கிறார், பாலா சிங்.
Summary in English : Actor Bala Singh says that Selvaragavan told NGK is unofficial Part 2 of Puthuppettai Movie.