சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் வெளியான NGK இத்தனை கோடி நஷ்டமா.? - ரசிகர்கள் ஷாக்
செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த என்ஜிகே படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்தது. படம் வெளியான அன்றே எதிர்பார்த்தபடி படம் இல்லை என விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் படக்குழுவினர் படத்தை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும், பொறுமையாகப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர்.
முதல் நாளுக்குப் பிறகு படம் நன்றாக போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள். மூன்று நாளில் உலகம் முழுவதும் 60 கோடி வசூலித்தது என்று சிலர் ஆதாரமற்ற செய்திகளைப் பரவ விட்டார்கள். திரையுலகில் விசாரித்ததில் மூன்று நாளில் உலகம் முழுவதுமே 25 கோடி வரைதான் வசூலித்திருக்கும் என்றார்கள். சுமார் 80 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் தெலுங்கில் சுமார் 9 கோடி வரை விற்கப்பட்ட படம் 3 கோடி வரையில் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளதாம். அங்கு பெரிய தோல்வியை நோக்கி படம் போய்க் கொண்டிருப்பதாகவும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான நஷ்டம் அங்கு வரும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய ஹீரோக்களில் அஜித், விஜய்யைக் காட்டிலும் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை வைத்திருந்த சூர்யாவுக்கு என்ஜிகே மேலும் ஒரு தோல்வியைக் கொடுத்துவிட்டது. தொடர்ச்சியாக ஆறாவது தோல்வியைக் கொடுத்துள்ள சூர்யா, இனி, கதைத் தேர்வில் சூர்யா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என திரையுலகிலேயே பலர் பேசி வருகிறார்களாம்.