ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை - காஞ்சனா 3 பட நடிகை பகீர் குற்றச்சாட்டு..!


சமீப காலமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாகவும், தைரியமாகவும் கூறி வருகிறார்கள். அதில், காஞ்சனா 3 படத்தில் நடித்த ஜானே கட்டாரியா தன்னை படுக்கைக்கு அழைத்த ஒருவரை பற்றி போட்டு உடைத்துள்ளார். 

பிரபல லுங்கி விளம்பரத்தில் நடித்துள்ள மாடலிங் நடிகரான ரூபேஷ் குமார் படுக்கைக்கு அழைத்துள்ளார். ஜானே கட்டாரியா ரஷ்யாவை சேர்ந்த நடிகை, 30 வயதாகும் இவரை ரூபேஷ் சமூக வளையத்தளம் மூலமாக தொடர்பு கொண்டு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு என கூற அதற்கு முடியாது என மறுத்துள்ளார் நடிகை. இதனால் நடிகை ஜானே கட்டாரியா-வின் ஆபாச புகைப்படங்களை காட்டி இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ரூபேஷ். 

இருப்பினும் அதற்கெல்லாம் மார்ஃபிங் செய்த புகைப்படங்கள் எம்னதால் அஞ்சாமல் நடிகை ஜானே சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க அவர்கள் உடனடியாக ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Blogger இயக்குவது.