சும்மாவே விஜய் ரசிகர்கள் பொழந்து கட்டுவாங்க..! - இப்போ சொல்லவா வேணும்..! - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா..?
விஜய்யின் 63-வது படமான "பிகில்" படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றால் போலா பட வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் தனது சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றன.
இப்படத்தை தொடர்ந்து மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் அடுத்தப்படம் நடிக்கிறார்.
அதை விட, இப்போது பெரிய விஷயம் என்னவென்றால் விஜய்யின் 65வது படத்தின் இயக்குனர் யார் என்பதும் அதில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்பது தான். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்யின் எல்லைக்கே கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அப்படி என்ன கதாபாத்ரத்தில் நடிக்கிறார் என்று கேட்கிறீர்களா..?