800 கோடி பட்ஜெட் - பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த இரண்டு பிரபல நடிகைகள்..!


தமிழ் சினிமவின் பிரபல இயக்குனர் மணிரத்னம். இவர் படத்தில் நடிக்க பல நடிகர் நடிகைகள் வெயிட்டிங். இவர் படங்களுக்ககென தனி ரசிகர் வட்டம் உள்ளது. 

இந்நிலையில், இவர் அடுத்ததாக பொன்னியின் செல்வன் கதையின் ஒரு பகுதியை மட்டும் பிரம்மாண்ட அளவில் படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். 


இது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இப்படத்தில் வந்தி தேவனாக நடிகர் கார்த்தி சிவகுமார், அருள்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவி ஆகியோரும் பூங்குழலியாக நடிகை நயன்தாராவும் சுந்தர சோழனாக நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கின்றார்கள். 


மேலும் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டயர் கேரக்டரில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். தற்போது இப்படத்தில் அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சுமார் 800 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. 

இந்த படம் தயாராகி வெளியாகும் பட்சத்தில் முதல் மூன்றுnநாட்களில் 1500 கோடி வசூல் செய்ய வேண்டும் அப்போது தான் போட்ட காசை எடுக்க முடியும் என்ற சூழலில் துணிந்து இறங்கியுள்ளார் மணி ரத்தினம். படத்தின் அதிகாரபூர்வ தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் விரைவில் வெளியாகும் என கூறுகிறார்கள்.
Powered by Blogger.