"அவராகவே போய்விட்டால் நல்லது.." - BCCI எடுக்கவுள்ள அதிரடி முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்


இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் வட்டம் யாருக்கு என்றால் அது நிச்சயமாக தல தோனிக்கு தான். ஆனால், வயது மூப்பின் காரணமாக அவர் ஒய்வு பெற வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். 

அதே சமயம், தோனிக்கு ஆதராகவும் பலர் கருத்து கூறி வருகிறார்கள். இந்நிலையில், இந்திய கிரிகெட் வாரியம் தோனி அவராகவே விலகி கொள்வது நலம். அவருக்கு பின், இளம் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு தோனி வழிவிட வேண்டும் என்கிறது. 


சரி, அடுத்த வருடம் நடக்கும் T20 உலகக் கோப்பை போட்டியிலாவது அவர் விளையாடுவாரா என்றால் அதுவும் சந்தேகம் தான் என்கிறார்கள். மேலும், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. 

இந்த அணியிலும் தோனி இடம் பெறுவது கடினம் தான் என்கிறார்கள். இந்த தகவல்கள் நிச்சயம் ஒரு தோணி ரசிகனை மிகவும் பாதிக்கும் என்பது மட்டும் உண்மை.

எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அவராக அறிவிக்காவிட்டாலும்,  அடுத்தடுத்து வரும் தொடர்களில் அவர் இடம் பிடிப்பது கடினம் எனவே தெரிகிறது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் ஒய்வு குறித்து தோனியிடம் விரைவில் பேச இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வுக்குழுவின், இப்படியான அதிரடி நடவடிக்கைகள் தோனியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Blogger இயக்குவது.