ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு தலைப்பாக மாறிய விஜய்யின் ஹிட் பாடல்..!
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடித்த ஜோதிகா இப்போது கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஜாக்பாட்' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை ஜோதிகா 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் மீண்டும் கைக் கோர்த்துள்ளார்.
இந்த படதிற்கு அழகிய தமிழ் மகன் படத்தில் இடம் பெற்று ஹிட் அடித்த விஜய் பாடலான ‘பொன்மகள் வந்தாள்' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அதற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு மேலும் இணையவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.