வாரிசு ஹீரோவின் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி - காரணம் இது தான்..!


தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான நடிகர் எனப் பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'சை ரா' படத்தின் மூலம் அங்கு அறிமுகமாக உள்ளார். 

அந்தப் படத்தை அடுத்து சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாக உள்ள 'உப்பெணா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாராம். 


அவரே படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத்' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைந்ததால் தமிழில் மட்டும் தற்போதைக்கு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். 


மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மார்க்கோனி மத்தாய்' படமும் மிகப் பெரும் தோல்வி அடைந்தது. இதனால், கடும் அப்செட்டில் உள்ளார் விஜய் சேதுபதி. இப்படி தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், உடனடியாக ஒரு ஹிட் படம் கொடுத்து தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் விஜய்சேதுபதிக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் விலகிய தெலுங்கு படத்திற்கு தற்போது விஜய் சேதுபதிக்குப் பதிலாக வேறு ஒரு நடிகரைத் தேட ஆரம்பித்துள்ளார்கள்.
Blogger இயக்குவது.