அடப்பாவமே.! - வெங்கட்பிரபு இந்த அளவுக்கு இறங்கி வந்துட்டாரே..!


சென்னை 28, மங்காத்தா படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, மீண்டும் அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்கப்போவதாக சொல்லி வந்தார். அஜித்தின் ரசிகர்களும் அதை வரவேற்றனர். 


ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. இதனால் சிம்புவை வைத்து மாநாடு என்ற அரசியல் படத்தை இயக்க தயாரானார். சிம்பு வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்து விட்டு வந்தார். ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. 


தொடர்ந்து சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. மேலும் படம் தொடருமா என்று கூட சந்தேகம் வர தொடங்கவிட்டது. இந்நிலையில் வெங்கட்பிரபு, வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபல ஹாட்ஸ்டார் இணையதளத்திற்கு அவர் இந்த தொடரை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, திரைப்படங்களை இயக்கி வந்த வெங்கட்பிரபு, இப்படி வெப் சீரிஸ் இயக்கம் அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே..! என ரசிகர்கள் உச் கொட்டி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.