பிகில் படத்தால் கடும் மன வேதனையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்...!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் "பிகில்" திரைப்படம் 2019 தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்
ஏற்கனவே, தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த கூட்டணி என்பதால், இப்படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
நிலைமை அப்படியிருக்க இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்து கொண்டிருகின்றது. ஆனால், இந்நிலையில் பிகில் படத்திலிருந்து திருட்டுதனமாக இரண்டு பாடல்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.
இது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஏனெனில், இந்திய மொழிப்படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்கள் என பல வெளிநாட்டு படங்களுக்கு இசைமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில், அவர் இசையமைத்த படத்தின் பாடல்கள் அதிகாரபூர்வ ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆகியுள்ளது கண்டிப்பாக அது அவருக்கு தர்ம சங்கமான சூழ்நிலை தான்.