மாநாடு படம் தொடங்காமல் இருப்பப்தற்கு இது தான் காரணம் - இவரு திருந்த மாட்டாரு போலயே..?!?!?


நடிகர் சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படம் ரிலீஸ் ஆனது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இதையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கப்போவதாக கடந்த 2018 ஆண்டே அறிவிப்பு வெளியானது. 

படத்தை 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடலைக் குறைத்து, தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டிருந்தார். 


ஆனால், ரிலீஸ் என்று கூறிய ஜூன் மாதம் கடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் படத்தின் படப்பிடிப்பே தொடங்காமல் கிடக்கிறது. 


தற்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் "முஃடீ" படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார். ஆனால், சமீபத்தில், படத்தின் ஷூட்டிங்கில் தயாரிப்பாளருடன் சிம்புவுக்கு கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் நடிக்காமல் சிம்பு வெளிநாட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாராம். 

இதற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படமும் துவங்கவும் இல்லை. முஃடி ரீமேக் படமும் பாதியில் நிற்கிறது.

ஞானவேல்ராஜா இந்த பிரச்சனை பற்றி சிம்புவின் அம்மாவிடம் புகார் கூறியுள்ளாராம். இந்நிலையில், நடிகர் சிம்புவை சரியாக சூட்டிங் போகவைக்க குடும்பத்தினரே நேரடியாக களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளார்களாம்.

வாய்ப்பு கிடைக்காதா..? எப்படியாவது சினிமாவில் நடித்து விடமாட்டோமா.? என வாய்ப்பு தேடி ஒவ்வொரு இயக்குனரின் வீட்டு வாசலில் காத்துக்கிடப்பவர்கள் மத்தியில் இயக்குனர்களை அலைய விடும் இது போன்ற நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Blogger இயக்குவது.