இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் - முதலிடத்தில் யார்..? - இதோ ஆதாரம்..!


தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்கள் என்றாலே ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கடந்த 20 ஆண்டுகளாக அஜித், விஜய் என்ற காம்போ திரையுலகை அதிர வைத்து வருகின்றது. 

இவர்களது ரசிகர்களும் அடிக்கடி சமூக வளைத்தளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அஜித், விஜய் இருவரில் யாரவது ஒரு சாதனையை செய்து விட்டால் உடனே ட்ரென்ட் செய்து உலகிற்கே தெரியபடுத்தி விடுவார்கள் இரு தரப்பு ரசிகர்களும். 

அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் பற்றி ஒரு அதிரடி தகவல். இந்த வருடம் விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பக்கங்களில் விஜய் நம்பர் 1 இடத்தில் உள்ளார். 

ரஜினி அடுத்த இடத்திலும், நடிகர் அஜித் அஜித் 5வது இடத்திலும் உள்ளார். இதனால் ரசிகர்கள் விஜய் எப்போதுமே கிங் தான் என டுவிட்டரில் ட்ரென்ட் செய்து அசத்திவருகிறார்கள். 

இதோ ஆதாரம்,
Blogger இயக்குவது.