விஜய் படம் வந்தால் என்ன..? தீபாவளிக்கு எங்க படம் வந்தே தீரும்..! - பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிரடி..!
தமிழ் சினிமாவின் வெளியீட்டு நாட்களில் முக்கியமான நாள் தீபாவளி நாள். அந்தத் தினத்தில் படங்கள் வெளிவருவது திரையுலகில் உள்ள பலருக்கும் பிடிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடிக்கும் 'பிகில்' படம் வெளியாக உள்ளதாக முன்னரே சொல்லிவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 1000 தியேட்டர்கள் முழுவதும் அந்தப் படத்தை வெளியிட வாய்ப்பில்லை. எனவே, வேறு சில படங்களும் வெளியாகும். இருந்தாலும் 'பிகில்' படத்திற்குப் போட்டியாக படத்தை வெளியிட பலரும் தயங்குவார்கள்.
இந்நிலையில் தனுஷ், மெஹ்ரின் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக சத்யஜோதி நிறுவனம் தயாரித்த 'விஸ்வாசம்' படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்நிறுவனம் தான் 'பட்டாஸ்' படத்தையும் தயாரிக்கிறது. ரஜினிக்குப் போட்டியாகவே படத்தை வெளியிட்ட வெற்றியும் நல்ல வசூலையும் பெற்றவர்கள். இதனால், விஜய் படம் வந்தால் என்ன..? என்ற படத்தை வெளியிட எந்தத் தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்றே தெரிகிறது. இதனால், இந்த தீபாவளி ரேஸ் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது.