சியான் விக்ரமின் நியூ லுக் - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். படத்தில் நடிச்சோமா..? பணத்தை பார்த்தோமா..? என்று பல நடிகர்கள், இயக்குனர் வேலை செய்து கொண்டிருகிருக்கிறார்கள். 

ஆனால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு அதற்குண்டான அனுபவத்தை தரவேண்டும் என சில இயக்குனர்கள்,நடிகர் உழைக்கிறார்கள். அந்த வகையில், சியான் விக்ரமிற்கும் ஒரு இடம் உண்டு. 


ஜீரோ ஹேட்டர்ஸ் கொண்ட ஒரு நடிகர் என்றாலும் இவர் மீது பொதுவான ஒரு விமர்சனம் மட்டும் உண்டு. உடல் உழைப்பை போடுகிறார் ஆனால், திரைக்கதையில் ஃபோகஸ் செய்ய மாட்டேன் என்கிறார் என்பது தான்.

வருடத்திற்கு ஒரு படம்  வந்துவிடுகின்றது. ஆனால்,. ஹிட் அடிகிறதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனாலும், படத்திற்கு படம் கெட்டப் சேஞ்ச், உடல் எடையை ஏற்றுதல், குறைத்தால் என அசால்டாக செய்துவிட்டு போய்கொண்டே இருக்கிறார் சியான். 

அப்படிப்பட்ட இவரது நடிப்பில் கடாராம் கொண்டான் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விக்ரம் தனது நியூ லுக்கில் கடாராம் கொண்டான் பட ஆடியோ லாஞ்ச்சில் காட்சியளித்துள்ளார். 

இது இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள அஜய் ஞானமுத்துவின் படத்திற்காக என்றும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் விக்ரம் தனது அடுத்த படத்திற்கான லுக்கில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார்.



Powered by Blogger.