பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதி..!


பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின் ஆகியோர் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்பட்டு, அது சிறப்பாகவும் ஓடியது. 

இதையடுத்து, உலக அளவில் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளராக இருந்து, ஜொலித்த இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை, மிக விரைவில் சினிமாப் படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். 


முத்தையா முரளீதரனையே, அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வைக்கலாம் என, படத்தை தயாரிக்க முன் வந்திருப்பவர்கள் முயன்றுள்ளனர். 


ஆனால், அதற்கு முத்தையா முரளிதரன் உடன்பட மறுத்து விட்டார். இதையடுத்து, முத்தையா முரளீதரன் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேசி முடித்துள்ளனர். 

விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. படத்திற்கு 800 என தலைப்பு வைத்துள்ளதாக தெரிகிறது.
Blogger இயக்குவது.