ஆறுதல் சொல்றதெல்லாம் இருக்கட்டும் கைய எங்க மேன் வச்சி இருக்க..! - கவினை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!


பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் இன்று எட்டாவது நாள் எபிசொட் ஒளிபரப்பானது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே நேர்கொண்ட பார்வை நடிகை அபிராமி கவின் மீதான காதலை வெளிப்படுத்தி நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டினர். 

பிக்பாஸ் வீட்டில் கவின் மட்டும் தான் இருப்பது போல வீட்டில் உள்ள இளம்பெண் போட்டியாளர்கள் பலரும் அவரையே சுற்றி சுற்றி வருகின்றனர். அவரும், மாமா, மச்சான் என கேஷுவலாக இருக்கிறார். இதெல்லாம் சரி தான். 

ஆனால், பெண் போட்டியாளர்களிடம் கவின் நடந்து கொள்ளும் விதம் தான் ரசிகர்களின் கிண்டலுக்குள்ளானது. எப்போது பார்த்தாலும் பெண் போடியலர்களுனேயே இருக்கிறார் கவின். 

கேட்டால் Fun என்கிறார். சக பெண் போடியாளர்களும் அவர் செய்யும் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நன்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். அவருகளும், Just fot Fun என்கிறார்கள். இதெல்லாம் Fun. தமிழ் கலாச்சாரம் வேறு Fun வேறு என்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விட்டார்கள். என்னத்த சொல்லி என்னத்த பண்ண.. 

இந்நிலையில், இன்று காலை கேமரா முன்பு நின்றுகொண்டு அழுதுகொண்டிருந்த ஷாக்ஷிக்கு ஆறுதல் கூறினார் கவின். ஆனால், ஷாக்ஷியின் இடுப்பின் மீது கை வைத்துக்கொண்டு கேஷுவலாக ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். 

இதையெல்லாம், ஒன்னும் கேக்காதிங்க.. கேட்டால் இது Just Friendly Fun.. என்று கூறிவிடுவார்கள். இது குறித்து இணையத்தில் வைரலாகி வரும் மீம் இதோ, 

Blogger இயக்குவது.