கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் பிக்பாஸில் கலந்து கொண்டாரா மதுமிதா..? - இதோ பதில்


ஜாங்கிரி மதுமிதா தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ் பெற்றவர். 

அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் இணையாக நடித்து "ஜாங்கிரி மதுமிதா" என புகழ் பெற்றார்.


இவரை, சில ரசிகர்கள் தேனடை மதுமிதா என்றும் கூறுவார்கள். ஆனால், அது இரட்டை அர்த்தத்தில் உள்ளது என்பதால் ஜாங்கிரி மதுமிதா எனவே பொதுவாக அறியப்படுகிறார்.


இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்தது. திருமணம் ஆன, மூன்றே மாதத்தில் கணவனை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் இவர் இந்த முடிவை எடுத்தாரா..? என கிசுகிசுக்கள் உலா வந்து கொண்டிருந்தனர் பிக்பாஸ் ரசிகர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும். இதனால், பட வாய்புகள் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் அவர் பிக்பாஸ் நிகழ்சிக்கு சென்றுள்ளார்.

ஆனால், திருமணம் ஆகாமல் இருந்த போது நடைபெற்ற இரண்டு சீசன்களிலும் இவரை கலந்துகொள்ள அழைத்தார்கள். ஆனால, அப்போதெல்லாம் கலந்துகொள்ளாமல் இப்போது கலந்து கொண்டிருக்கிறார் மது. மேலும், கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 40 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு நாள் கூட தன்னுடைய கணவனை மிஸ் செய்கிறேன் என்று மதுமிதா கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.