விஜய்யா..? - அஜித்தா..? - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நடிகை காயத்ரி அதிரடி பதில்..!


நடிகர் விஜய் மற்றும் அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்கு முடியாத நடிகர். இவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எப்படி சண்டை போட்டுக்கொள்வார்கள் என்பதை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. 

ஏதாவது ஒரு டாப்பிக்கை எடுத்து வைத்துக்கொண்டு நாள்தோறும் நடக்கும் சண்டைகள் அதிகம். அதுவும், இருவரது படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் சொல்லவே தேவையில்லை.  


மேலும், சினிமா பிரபலங்கள் யாராவது ட்விட்டரில் பேசினால், 'உங்களுக்கு விஜய்-அஜித் இருவரும் யாரை பிடிக்கும்?' என்ற கேள்வியை சிலர் தவறாமல் கேட்டுவிடுவார்கள். 

அப்படிதான் தற்போது நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பட நடிகை காயத்திரியிடம் ரசிகர் ஒருவர் அஜித்தா..? விஜய்யா..? என்ற கேள்வியை கேட்டுள்ளார். 

அதற்கு அவர் 'ஓடி போய்டு' என கோபத்துடன் பேசியுள்ளார். யாரவது ஒருவர் பெயரை சொன்னால் மற்ற நடிகரின் ரசிகர்கள் திட்டுவார்கள் என்பதால் இப்படி லாவகமான பதில் அளித்துள்ளார். 


Blogger இயக்குவது.