சிவகார்த்திகேயன் நடிக்கும் "ஹீரோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.! -இதோ மாஸ் புகைப்படம்


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும் படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூனும், நடிகை இவானா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 


இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்நிலையில், இன்று இந்த படத்தின் டைட்டில் லோகோ டிசைன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் புகைப்படம் ஒன்று ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என குறிப்பிட்டு வெளியாகியுள்ளது.
Powered by Blogger.