அவன் நடிப்பை பார்த்து நானே ஏமாந்து போனேன் - கவினை விளாசிய தயாரிப்பாளர்


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் கவினுக்கு ஏற்கனவே காதலி இருப்பது எனக்குத் தெரியும் என தயாரிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் 16 பேரில் ஒருவராக கலந்து கொண்டவர் கவின். 

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் எப்போதும், பெண்களுடனேயே இருப்பதாக புகார் எழுந்தது. இருந்தபோது, அவர் போட்டியாளர்கள் லாஸ்லியாவையும், சாக் ஷியையும் காதலிப்பது போல நடந்து கொண்டார். இறுதியில், இருவருடனும் நான் நட்பாகத்தான் பழகினேன் என கழன்று கொண்டார். 


இது பார்வையாளர்களையும், சக போட்டியாளர்களையும் எரிச்சலுக்கு ஆளாக்கியது.இந்நிலையில், கவினுக்கு, ஏற்கனவே ஒரு காதலி உண்டு. அவர், காதலியோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன் என, நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் தயாரிப்பாளரான சந்திரசேகர் திடீர் குண்டு போட்டிருக்கிறார்.


அவர், சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:கவின் நல்ல நடிப்புத் திறமை மிக்கவர். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து, அவரை வைத்து, ஒரு காதல் படம் எடுக்க வேண்டும் என விரும்பினேன். அப்போதுதான், அவர் தன் காதலியுடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 

அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து நானே ஏமாந்தேன். அதேபோலவே, இப்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம், தமிழக மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது காதலி யார் என்பது எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அதை நான் இப்போதைக்கு வெளியே சொல்ல மாட்டேன். 

கவினே விரைவில் அதை வெளியே தெரிவிப்பார்.நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சந்திரசேகர்.
Blogger இயக்குவது.