ரஜினி படத்தின் வசூலை வைத்து தான் இந்த அஜித் படத்தை எடுத்தேன் - தயாரிப்பாளரே கூறிய தகவல்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் படங்கள் கடந்த பொங்கல் பண்டிகையன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

திட்டமிட்டு நடந்த இந்த மோதல் இவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் இன்று வரை சண்டை, சச்சரவும் இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு காரணம் தமிழகத்தில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக வசூல் செய்தது என்பது தான். 

இதன் காரணமாகவே இன்றும் சண்டை தொடர்கின்றது, ஆனால், சமீபத்தில் அஜித்தின் வான்மதி படத்தை தயாரித்த சிவ சக்தி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ள செய்தி ஒன்று அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. 

இதில், நான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "முத்து" படத்தை விநியோகம் செய்தேன். அந்த படத்தின் மூலம் தினமும் வரும் கலெக்‌ஷனை வைத்தே வான்மதி படத்தின் 60% படப்பிடிப்பை முடித்து விட்டேன் என அவர் கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.