ஒருவேளை ராஜராஜ சோழன் இப்போது இருந்திருந்தால் இது தான் நடனத்திற்கும் - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பா.ரஞ்சித்


மெட்ராஸ் மற்றும் கபாலி பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ராஜராஜ சோழன் நிலங்களை பறித்துக்கொண்டார் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். 


அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம் இனி இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என பா.ரஞ்சித்து நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ரஞ்சித் தான் இதற்குமுன்பு பேசியது தவறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். " ஒருவேளை ராஜராஜன் இப்போது இருந்திருந்தால் நான் பேசியதைக் கேட்டு என்னை உரையாட அழைத்திருப்பார்" என சர்ச்சையை கிளபியுள்ளார். ராஜராஜனின் பேரன்கள் பல்வேறு சாதிகளில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

ராஜ ராஜனின் ஆட்சிகாலம் தான் இருண்ட காலம் என ராஜராஜ சோழனை அவன் இவன் என ஒருமையில் பேசிவிட்டு, இப்போது நான் பேசியதை கேட்டிருந்தால் என்னை உரையாடaஅழைத்திருப்பார் எனmமரியாதையாக பேசியுள்ளார் ரஞ்சித்.
Blogger இயக்குவது.