மெஹா ஹிட் பட இயக்குனர் மற்றும் தனுஷ் கூட்டணி..! - பிரமாண்ட தயாரிப்பாளர்..!
YNot ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து, கார்த்திக் சுப்பாராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
காங்ஸ்டர் - திரில்லர் படமாக உருவாகும். இப்படத்தில், நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கிறார். முழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள நிலையில் இப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள்.
தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
ரஜினி - கார்த்தி சுப்பராஜ் இணைந்த பேட்ட படத்தை தொடர்ந்து, தனுஷ் - கார்த்தி சுப்பராஜ் இணையும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.