மீண்டும் உருவாகிறது யோஹன் அத்தியாயம் ஒன்று - ஹீரோ யாரு தெரியுமா..?


இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படத்தின் கதை மீண்டும் தூசி தட்டப்படவிருக்கிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. 


அப்படத்திற்கு முன்பே அவர் தனுஷை வைத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இரண்டு திரைப்படங்களும் முடிவடையும் நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. 


இந்நிலையில், சினிமா தயாரிப்பளரும் கல்வி தந்தையுமான ஐசரி கணேசன் கவுதம் மேனனுக்கு உதவ முன் வந்துள்ளார். அவர் மூலமாக எனை நோக்கி பாயும் தோட்டா விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கு கைமாறாக அவரின் உறவினர் வருண் என்பவை வைத்து கவுதம் மேனன் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என ஐசரி கணேசன் கேட்டுள்ளார். 

எனவே, விஜய்க்காக கவுதம் மேனன் உருவாக்கிய யோஹான் அத்தியாயம் ஒன்று படத்தின் கதையை 'ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று' என தலைப்பு மாற்றி வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்த கவுதம் மேனன் திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
Powered by Blogger.