விஜய் ரசிகர் கத்தியால் தாக்கியதில் படு காயமடைந்த அஜித் ரசிகர் - மருத்துவமனையில் கவலைக்கிடம்
நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் சண்டை இன்று நேற்றல்ல என்பது அனவைருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், சமூக வலைதள சண்டைகள் சில நேரம் பொது வெளியில் கைகலப்பாக மாறிய சம்பவங்களும் நடந்துள்ளனர்.
ஆனால், நேற்று புழல் காவாங்கரையில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடந்துள்ள கத்தி சண்டை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் அஜித் ரசிகரான உமாஷங்கர் என்பவருக்கும், ரோஷன் என்ற விஜய் ரசியகருக்கும் விஜய்யா..? அஜித்தா.? என்ற விவாதம் நடந்துள்ளது.
விளையாட்டாக ஆரம்பித்த இந்த விவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது கொடுமை. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர் உமா ஷங்கரின் பேச்சால் ஆத்திரம் அடைந்த ரோஷன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து உமாசங்கரின் தலை, மார்பு பகுதியில் சரமாரி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இரத்தவெள்ளத்தில் விழுந்து துடிதுடித்த உமாசங்கரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.