யாரு லேடி சூப்பர் ஸ்டார்-னு பாத்துருவோம் - நயன்தாரவோடு மோதும் பிரபல நடிகை..! - உச்ச கட்ட பரபரப்பு
இப்போதெல்லாம், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு மவுசு அதிகரித்து வருகின்றது. ஹீரோ யாரு என்று கேட்டுவிட்டு படத்திற்கு போன காலம் போய், இப்போது ஹீரோயின் யாரு என்று கேட்கும் காலம் வந்து விட்டது.
முன்னணி நடிகைகள் பலரும் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள், முதலில் இந்த ஃபார்முலாவை தொடங்கி வைத்தது நயன்தாரா தான்.
அதனை தொடர்ந்து, திரிஷா, ஹன்ஷிகா, அமலாபால் ஆகியோ ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார்கள். இதில், புதிதாக இணைந்திருப்பவர் நடிகர் ஜோதிகா. தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக முன்னணியில் இருக்கும் நடிகை நயன்தாரா.
இவரது நடிப்பில் வெளியான் அறம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி இவர் நடிப்பில் உருவாகி பொட்டியில் தூங்கிக்கொண்டிருந்த "கொலையுதிர் காலம்" என்ற திரைப்படம் ரிலீசாகிறது. அதே நாளில், ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.
ஆனால், கொலையுதிர்
காலம் படத்திற்கு ப்ரோமோஷன் என்று சொல்லிக்கொள்ளும் அளவில் எதுவும் இல்லை. ஆனாlல், ஜாக்பாட் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் இறங்கி அடிகிறார்கள். யார் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிந்துவிடும்.