"உங்களுக்கு என்ன பைத்தியமா..? எந்த நடிகையாவது இதை செய்வார்களா..?": - விளாசும் நெட்டிசன்கள்


பாரத் அனே நேனு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கியாரா அத்வானி. மேலும் அவர் நடிப்பில் சமீபத்தில் வந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் கபீர் சிங் படமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. 

கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா. ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் ஒரு ஆலியா பட் இருப்பதால் குழப்பத்தை தவிர்க்க வேறு பெயருக்கு மாறிவிடு என நடிகர் சல்மான் கான் தான் இவருக்கு அறிவுரை சொன்னாராம். 


"பிரியங்கா சோப்ரா நடித்த Anjana Anjani படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் கியாரா. அந்த படம் பார்த்தபோது அந்த பெயர் எனக்கு அதிகம் பிடித்தது. எனக்கு ஒரு மகள் பிறந்தால் அவருக்கு கியாரா என்று பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். 


ஆனால் ஒரு சமயத்தில் எனக்கே ஒரு பெயர் தேவைப்பட்டதால், அதை நானே வைத்து கொண்டு கியாரா அத்வானி ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார் அம்மணி.


இந்நிலையில், பாப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள இவர் தன்னுடைய தலைமுடியை வெட்டி குட்டையாக்கி விட்டார். எதனால், இப்படி முடியை வெட்டி  ஆளே மாறிவிட்டீர்கள் என கேட்க, நான் என்னுடைய வேலையில் பிசியாக உள்ளேன். என்னால், என்னுடைய முடியை பராமரிக்க தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என கூறியுள்ளார். 

இதனை கேட்ட நெட்டிசன்கள் முடிய பராமரிக்க முடியவில்லை என எந்த நடிகையாவது இப்படியொரு முடிவை எடுப்பார்களா..? உங்களுக்கு என்ன பைத்தியமா..? என விளாசி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.