தலையில் விழுந்த அடி - ஆறு மாதம் நடந்த விஷயங்களை மறந்துபோன நடிகை - ரசிகர்கள் ஷாக்


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி வாஷ்போர்டு ஆப்ஸ் எனப்படும் தட்டையான வயிற்றை பெற கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் திஷா பாட்னி அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் கான்கிரீட் தரையில் பயிற்சி மேற்கொள்ளும் போது ஒருமுறை தலையில் அடிபட்டு 6 மாதங்கள் நடந்த விஷயங்களை மறந்துவிட்டாராம்.


"ஆறு மாத வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன். எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை" என அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Blogger இயக்குவது.