பிகில் வசூலுக்கு பட்டாசு வைத்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு - சூடு பிடித்த தீபாவளி ரேஸ்..!
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார்.
தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அதனால், இந்த படமும் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அமைவது உறுதியாகியுள்ளது.இந்த தீபாவளிக்கு பிகில் படம் சோலோ ரிலீஸ் என்று தான் பலரும் கணித்து வந்தார்கள்.
ஆனால், இப்போது நடிகர் தனுஷின் அடுத்தபடமான "பட்டாசு" திரைப்படமும் தீபாவளி ரேஸில் கலந்து கொண்டிருகின்றது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை "பட்டாசு" படக்குழு வெளியிட்டுள்ளது.