அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செய்த செயல்..!


நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து அவர்கள் கொண்டாடும் விதம் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து படம் ரிலீசாகி ஃபாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட் வரை உன்னிப்பாக கவனிப்பார்கள்.

ஒவ்வொன்றையும் கொண்டாடுவார்கள். அதிலும், ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என்று வந்து விட்டால் சமூக வலைதளங்களில் திருவிழா கோலம் தான். அப்படி கொண்டாடுவார்கள். 


அஜித், விஜய் ரசிகர்கள் மட்டும் தான் அப்படி கொண்டாடுவார்களா..? ஏன் நாங்க கொண்டாட மாட்டோமா..? என களத்தில் குதித்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். 


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "ஹீரோ" படத்தின் டைட்டில் லோகோவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை சிவகார்த்திகேயன், ஃப்ளக்ஸ், பேனர் என தங்கள் விருப்படி கொண்டாடி வருகிறார்கள்.
Powered by Blogger.