அஜித்தை சந்தித்தால் நிச்சயம் இதை கூறுவேன் -நடிகை ஐஸ்வர்யா ராய் திட்டவட்டம்
நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 1994-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அப்போது, உலக அழகி ஐஸ்வர்யா ராய் கொண்டாடப்பட்டார். உலக அழகியுடன் நடிக்க வேண்டும் என இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் விரும்பினர். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆனார்.
சினிமா இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்டார். தமிழில், நடிகர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ஜீன்ஸ், ராவணன், எந்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சமீபத்தில், ஐஸ்வர்யா ராய் சென்னையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது பேசிய அவர் மணிரத்னம் புதிய படத்தில் தான் நடிப்பது உறுதி என கூறியுள்ளார்.
அஜித் பற்றி எழுப்பிய கேள்வி குறித்து பேசிய அவர், அஜித் மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர், அவர் வெற்றிகரமாக இருப்பது சந்தோஷம், அவரது ரசிகர்கள் துணை இருப்பது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
இதுபோன்ற வெற்றிக்கு அவர்
மிகவும் தகுதியானவர், அவரது குடும்பத்தினரை கூட நான் ஒரு நாள்
பார்த்துள்ளேன். இனி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றிக்கு நான்
வாழ்த்து கூறுவேன் என்று பேசியுள்ளார்.