நான்காம் நாளில் எகிறிய வசூல் - உலக அளவில் நேர்கொண்ட பார்வை வசூல் நிலவரம்..! - ஹாட் அப்டேட்..!


பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களின் ஆதாரமான உரிமைகளையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் திரைப்படம். 2016-ல் வெளியான பிங்க் என்கிற ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம். 

தமிழில் சில வணிக அம்சங்களை இணைத்திருந்தாலும் மூலத் திரைப்படத்தின் மையத்தைச் சிதைக்காமல் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

பெண்களின் இயல்பான சமிக்ஞைகளைக் கூடப் பாலியல் அழைப்பாகவும் காதலாகவும் கருதிக் கொண்டு பின்தொடர்ந்து துன்புறுத்தல்களைத் தரும் ஆண்களுக்கு மிகச் சரியான செய்தி இந்தத் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 


இதற்கு உறுதுணையாக இருந்த அஜித்துக்கும் இயக்குநர் வினோத்திற்கும் பாராட்டு. ‘இந்தப் பொண்ணுங்க சைக்காலஜி இருக்கே.. அவங்க வேணாம்-னு சொன்னா.. வேணும்-னுதான் அர்த்தம்’ என்பது போல பல அபத்தமான கண்டுபிடிப்புகளும் முன்தீர்மானங்களும் ஆண்களிடம் இருக்கின்றன. 


‘அப்படியெல்லாம் அல்ல, ஒரு பெண் NO என்று சொன்னால் அதற்கு NO என்று மட்டுமே பொருள்.' என்கிற செய்தியை அழுத்தம் திருத்தமாக நெற்றியில் அடித்தாற் போல் செல்கிறது இந்தத் திரைப்படம். 

ஆனால், தமிழ் காலச்சரதிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என சிலர் கூறுகிறார்கள். அதுவும் உண்மை தான். ஆனால், ஒரு பெண் எப்படிபட்டவளாக இருந்தாலும் அவள் வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்பதை உணர்தவும், பெண்கள் மீதான மனநிலையில் ஆண்கள் மத்தியில் மாற வேண்டும் என்பதை அழுத்த சொல்வதே இந்த படம். தவிர, இதனால் இந்த படம் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்பதைஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்நிலையில், இந்த படம் கடந்த நான்கு நாட்களில் தா தமிழகத்தில் மட்டும் செய்த வச்சொல் விபரங்களை இங்கே பார்க்கலாம் :

நாள் 1 : 16.7 கோடி
நாள் 2 : 12.3 கோடி
நாள் 3 : 10.70 கோடி
நாள் 4 : 12.70 கோடி

என தமிழகத்தில் மட்டும் 52 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. மேலும், தமிழகம் உட்பட இந்திய அளவில் பார்க்கும் போது 71 கோடி ரூபாயும். வெளிநாடுகளில் 36 கோடி ரூபாய் என நான்கு நாட்களில் 107 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது நேர்கொண்ட பார்வை.
Powered by Blogger.