வரலாறு படத்தில் அஜித் ஏ.ஆர்.ரஹ்மான் இடையே என்ன பிரச்சனை..? - 13 வருடங்களாக இருவரும் ஏன் கூட்டணி அமைக்கவில்லை..?


நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படம் இன்று (ஆகஸ்ட்-8) வெளியாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 60 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. 

"தல60" என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்து. 


இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், பிகில் படத்திற்கு பிறகு எந்த ஒரு புது படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளேன். அது தவிர வேறு எதுவும் காரணமில்லை என தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் அஜித்தின் 60 வது படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. நடிகர் அஜித் - ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு படத்தில் இணைந்தனர். 

அதன் பிறகு, 13 வருடங்களாக அஜித்தின் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவே இல்லை. இதனால், வரலாறு படத்தினால் அஜித்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன பிரச்சனை..? எதனால் இருவரும் வரலாறு படத்திற்கு பிறகு 13 ஆண்டுகளாக கூட்டணி அமைக்கவே இல்லை..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Blogger இயக்குவது.