ராஜா படப்பிடிப்பில் அஜித் - வடிவேலுவு இடையே நடந்த நிஜ சண்டை ! - அஜித்தின் மறுபக்கத்தை பார்க்கலாம் வாங்க..! -18 வருட வரலாறு..!


அஜித் படங்களை உற்றுநோக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். ராஜா படத்திற்கு பிறகு அஜித் படத்தின் வடிவேலு இணைந்து நடித்ததே இல்லையே என்ற விஷயம்.

ஆம், ராஜா படத்தில் அஜித்திற்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் தொடர்ந்து அஜித் படங்களில் வடிவேலு நடிக்காமல் போனதற்கு காரணம்.


என்னது, வடிவேலு, தல கிட்ட பிரச்சனை பண்ணினாரா..? என்று உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. ராஜா படத்தில் அஜித்திற்கு மாமா-வாக நடித்திருப்பார் நடிகர் வடிவேலு.


அவருடைய கதாபாத்திரத்தின் படி நடிகர் வடிவேலு அஜித் உட்பட அனைவரையும் வாடா போடா என்று அழைப்பது போல தான் உருவாக்கியிருந்தார் இயக்குனர் எழில்.


அஜித்தின் பல நல்ல பழக்கங்களை கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால், அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் ஒன்று உள்ளது. நான் எப்படி எல்லோருக்கும் மரியாதை கொடுகிறேனோ..? அதே போல தனக்கும் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தான் அஜித்தின் கெட்ட பழக்கம்.

ஆயிரத்தெட்டு விஷயம் இருந்தாலும் தன்னை மரியாதை குறைவாக பேசிவிட்டால் அஜித்திற்கு வரும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. படத்தில் கூட அஜித்தை வாடா போடா என்று அழைக்கும் வசனங்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும், அடுத்த நொடியே கூறியவரை அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். 

இப்படிப்பட்ட கோபத்திற்கு சொந்தக்காரரான அஜித் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட், குழந்தை நட்சத்திரங்களை கூட வாங்க போங்க என்று தான் அழைப்பார். தவறியும் வாடா , போடா, வா, போ என அழைத்துவிட மாட்டார்.

இப்படி குணாதியம் உள்ள தல அஜித். வடிவேலு, வயதில் பெரியவர் தான், படத்தில் தான் வாடா போடா என அழைக்கிறார் என்றாலும் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனை அறிந்த இயக்குனர் வடிவேலுவிடம் கூறி, அஜித்தை மட்டும் வாங்க மாப்ள, போங்க மாப்ள என்று கூப்பிடுவது போல நடிக்க சொன்னாராம். வடிவேலுவின் மார்கெட் உச்சத்தில் இருந்த நேரம் அது. அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டாராம். பிறகு, படத்தின் எடிட்டிங்கில் தான் அதனை சரி செய்துள்ளார்கள். இங்கு விழுந்த விரிசல் தான். அன்று முதல் அஜித்-வடிவேலு கூட்டணியே அமைப்பதில்லை.

இன்னொரு மேட்டரு சொல்றோம் கேளுங்க..! 1995ல் அஜித்-விஜய் காம்பினேஷனில் உருவான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் வடிவேலுவும் பல காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், அந்தப்படத்தில் இருவரும் சேர்ந்து வரும் காட்சி ஒன்றுகூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Powered by Blogger.