சர்கார் படத்தின் இந்த ஒரு நிமிட காட்சி தான் இந்தியன் 2 படத்தின் மொத்த கதையே..! - eXclusive update


இந்தியன் 2 படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி, சர்கார் படத்தில் வரும் ஒரு நிமிட காட்சி தான் இந்தியன் 2 படத்தின் மொத்த கதையே என்று கூறலாம்.

அதெப்படி ஒரு நிமிட காட்சியை ஒரு படமாக எடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா..?. சர்கார் படத்தில் ஹீரோ விஜய்யின் ஒட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்ததை அறிந்த பின்பு காரில் ஏறி விடு திருப்பும் போது கார் ட்ரைவரிடம் பேச்சு கொடுப்பார். 

அப்போது, ஒரு கலெக்டர் அலுவலகத்தை கடக்கும் போது இங்க என்ன பிரச்சனை என்று கேட்பார். அப்போது, கந்து வட்டி கடன் பிரச்னையால் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தை பற்றி கூறுவார் ட்ரைவர். 


இதை ஏன் யாரும் எதிர்த்து கேட்க வில்லை...? எல்லோருக்கும் தெரியப்படுத்தினீர்களா..? என்று கேட்பார் விஜய். அதற்க்கு, ட்ரைவர் கண்டிப்பா தெரியப்படுத்துவோம். ஒருவர் எங்களுக்கு வாட்சப்பில் அனுப்புவார். அதனை நாங்கள் இன்னொருத்தருக்கு அனுப்புவோம். அப்படி மாறி மாறி ஷேர் பண்ணிகிட்டே இருப்போம். அதுக்குள்ள இன்னொரு பிரச்சனை வந்துவிடும் அப்போது, இதை மறந்துவிட்டு அதனை ஷேர் செய்ய போய்விடுவோம் என்று கூறுவார். 


இது தான் இந்தியன் 2 படத்தின் கதை, நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தனது யூ-ட்யூப் சேனலில் பதிவு செய்து கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் இதனை தட்டிக்கேட்போம் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுகிறார். 

பொங்கி எழும் இளைஞர்கள் அந்த வீடியோக்களை லைக் செய்வதோடும், ஷேர் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறார்கள். இதனை, வெளிநாட்டில் இருந்து கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியன் தாத்தா இவனுங்களை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று இந்தியா திரும்பி பிரச்னைகளை களைவதும், இளைஞர்களுக்கு புத்தி சொல்வதும் தான் மீதி கதை.
Blogger இயக்குவது.