2019 நிலவரப்படி தமிழ் சினிமாவில் TOP 5 ஹீரோக்கள் வாங்கும் சம்பளம்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வாங்கும் சம்பளம் மற்றும் நடிகர்கள் விக்ரம், அஜித் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. மேலும், படத்தின் லாபத்திலும் கணிசமான பங்கு அவருக்கு செல்வதாக கூறுகிறார்கள்.
சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தளபதி விஜய் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறார். சம்பளம் முழுவதையும் பெற்ற பிறகே படத்தில் நடிக்கிறார்.
அடுத்த படியாக, அவரை தொடர்ந்து தல அஜித் 40 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். காசோலை அல்லது RTGS முறையில் தான் சம்பளத்தை பெறுகிறார். தமிழ் சினிமாவில் பணமாக சம்பளத்தை வாங்க மறுத்துவிடும் ஒரே நடிகர் அஜித் தான்.
அடுத்த கட்டமாக வருகிறார் நடிகர் சூர்யா 30 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குகின்றனர். பெரும்பாலும் தன்னுடைய உறவினர்கள் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கே கால்ஷீட் ஒதுக்குகிறார். இவர்களை தொடர்ந்து, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் 15 முதல் 20 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள்.
சம்பளம் வித்தியாசமாக இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் செல்லும் போது முழு சம்பளமும் செட்டில் ஆன பிறகே டப்பிங் தியட்டார் பக்கம் செல்கிறார்கள் இந்த முன்னணிநடிகர்கள்.