20 நாட்களை கடந்துள்ள "நேர்கொண்ட பார்வை" படைத்துள்ள புதிய சாதனை - இது தெரியுமா..?


பொதுவாக தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமையும் தவறாமல் குறைந்தது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் வெளியாவது வழக்கம். நாலு பாடல், நாலு சண்டைகாட்சிகள், கொஞ்சம் காமெடி, ஹீரோயின் கிளாமர், ஒன்றுக்கும் உதவாத ஒரு கதை. இப்படிதான் பல படங்கள் வெளியாகி முதல் மூன்று நாள் 50% அரங்கு நிறைந்தாலே போதும் லாபம் என்ற நோக்கில் வெளியாகி வருகின்றன. 


ஆனால், இதில் ஆரோக்யமான விவாதத்தை, உரையாடலை ஏற்படுத்தும் படங்கள் மிகவும் சொற்பமாகவே வருகின்றன. சொல்லப்போனால், ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள்தான் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறுகிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்கள் பலரும் கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர். 


அந்த வகையில், அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு நேர்மறையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அஜித் குமார் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமான படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டக் கூடிய வகையிலான படங்கள் சிலவே உள்ளன. 

அந்த சில படங்கள் பட்டியலில், முத்திரை பதிக்கும் படமாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான இப்படம் 20 நாளை கடந்துள்ளது, இதனை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இப்படிபட்ட ஒரு கதைக்களம் கொண்ட படம் 20 நாட்களுக்கு மேல் 300+ திரையரங்குகளில் ஓடுவது சாதனை என பலரும் பாராட்டி வருகின்றனர்.
Blogger இயக்குவது.