மீண்டும் தொடங்குகிறது இம்சை அரசன் 24-ம் புலிகேசி - ஆனால், ஹீரோ வடிவேலு இல்லை..! - சிம்புதேவன் அதிரடி..!


வைகப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ இம்சை அரசன் 23ம் புலிகேசி'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டது படக்குழு. 

இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், நடிகர் வடிவேலு செய்த வம்பு காரணமாக படம் ட்ராப் ஆகி விட்டது. இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க வடிவேல் நடித்த இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு தயாரித்தார். 


சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 


இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் கதறினார். ஆனால், வடிவேலு இறங்கி வருவதாக தெரியவில்லை.


இந்த பிரச்சனையில் வடிவேலுவிடம் நஷ்ட ஈடு பெறலாம். ஆனால், இம்சை அரசன் படக்குழு மிகப்பெரிய தவறை செய்து விட்டது. வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிய தேதி வேறு. இவர்கள் படப்பிடிப்பு நடத்திய தேதி வேறு. நீதி மன்றத்துக்கு போனால் என்னுடைய கால்ஷீட்டை வீணடித்து விட்டார்கள் என வடிவேலுவின் பக்கம் தீர்ப்பு போய்விடும். இதனால், அந்த பணம் பத்து கோடியும் அம்பேல் தான். 


இதனால், மனமுடைந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனர் சிம்பு தேவன் ஆகியோர் இப்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார்கள். வடிவேலுவுக்கு பதிலாக நடிகர் சூரியை இம்சை அரசன் 24 புலிகேசியாக மாற்றி விடலாம். மற்றும் வடிவேலு சமபந்தப்பட்ட காட்சிகளை மட்டும் நீக்கி விட்டு சூரியை இடம் பெற செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 


இந்த முடிவு கை கொடுக்குமா..? சூரி-யை இம்சை அரசனாக ஏற்றுக்கொண்டு ஷங்கரின் மனவேதனையை போக்குவார்களா அவரது ரசிகர்கள்..? என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Blogger இயக்குவது.