இந்தியன் 2 கதை மற்றும் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் - முழு விபரம் இதோ
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் இந்தியன். இப்படத்தின் அன்றைய வசூல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் ரூ 100 கோடிகளை தாண்டும்.
படத்தை காட்டிலும் இந்த படத்தில் வந்தiஇந்தியன் தாத்தா இன்றளவும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார்.
இதில், நடிகர் கமல்ஹாசன் மட்டுமின்றி நடிகர் சித்தார்த் மற்றும் நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கதைப்படி, நடிகர் சித்தார்த் ஒரு யு-டியுப் பிரபலம். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் நடிக்கின்றாராம். யூ-ட்யூபில் பிரபலமாக இருக்கும் இவர் இந்தியாவில் நடக்கும் சில கொடுமைகளை தனது யூ-டியுப் சேனல் மூலமாக வெளிக்கொண்டு வந்து காட்டி இதனை நாம் எல்லோரும் தட்டி கேட்க வேண்டும், தட்டி கேட்க வேண்டும் என்று கதறுகிறார்.
ஆனால், நம்ம ஆளுங்க பரபரப்பாக பார்த்து விட்டு தட்டி கேட்பார்கள் என்று பார்த்தால் லைக் பட்டனை மட்டும் தட்டிவிட்டு கமெண்டுகளில் மட்டும் பொங்குகுகிறார்களே தவிர வேறு எதுவும் நடந்த பாடில்லை.
இதனை, வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் பார்த்து வருகிறார். பொறுத்திருந்து பார்க்கலாம் இளைஞர்கள் எழுவார்கள் என வயது மூப்பின் காரணமாக சில காலம் பொறுமையாகவே இருக்கிறார்.
ஆனால், இளைஞர்கள் எழுவது போல தெரியவில்லை என்பதால் ஒரு கட்டத்தில் உடலில் தான் வலிமை குறைவாக இருக்கிறது. உணர்விலும், மனதிலும் வலிமை குறையவில்லை என வெடித்தெழுகிறார் நம்ம இந்தியன் தாத்தா.
வெளிநாட்டில் இருந்து ஜொயிங் என விமானத்தில் பறந்து வருகிறார். வந்தவர் இந்த பிரச்னைகளை தட்டிக்கேட்பதே படத்தின் கதையாம். மேலும், ப்ரியா பவானி ஷங்கர் இப்படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடிக்கின்றார் என்பது கூடுதல் தகவல்.