அடேங்கப்பா..! இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..?
'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார்.
இதில் ஒரு கமல்ஹாசன் தான். வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அவரது பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார்.
இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். முதல் பாகத்தில் சகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர்.
இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதில் சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடபட்டுள்ளதாம். படப்பிடிப்பு நிற்காமல் குறித்த நேரத்தில் முடிந்து விட்டால் ஒகே. இல்லையென்றால், பட்ஜெட் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். காரணம், நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா என இரண்டு குதிரைகள் மேல் பயணித்து கொண்டிருக்கிறார் என்பது தான்.