பிக்பாஸ் சீசன் 3 - இந்த வார நாமினேஷன் லிஸ்ட் - முதன் முறையாக நாமினேட் ஆன போட்டியாளர் - ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்த அந்த பரபரப்பு இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக கவின் -லாஸ்லியா காதல் புராணத்தை தான் ஒளிபரப்பி வருகிறார்கள்.
மேலும், தொடக்கத்தில் இருந்து ரசிகர்கள் பலரின் ஆதரவை பெற்றுவந்த இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா கடந்த இரண்டு வாரங்களாக கணிசமான எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று நடந்த இந்த வாரத்திற்காக நாமிநேஷனில் கவின், வனிதா, ஷெரின், முகென் ஆகிய நான்கு பேர் நாமினேட் செய்யப்பட்டனர். கடந்த 9 வாரங்களாக ஒரு வாரம் கூட நாமினேட் ஆகாமல் இருந்த நடிகை ஷெரின் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார். இது ஷெரின் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
இந்த வாரம் யார் வெளியேற்றப்படவிருகிறார் என்பதை பிக்பாஸ் தான் முடிவு செய்ய வேண்டும். கன்டென்ட் கொடுக்காமலேயே ஒன்பது வாரங்களாக காலம் கழித்து வரும் நடிகை ஷெரின் தான் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டு ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்று தெரிகின்றது.