"நைட்டு ரெண்டு மணி வரைக்கும்அவ கூட என்னடா பேச்சு உனக்கு..?" - கவினை சுற்றி வளைத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் யாராவது ஒருவர் ஒவ்வொரு சீசனுக்கும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் பாலாஜி மற்றும் அனந்து பங்கேற்றனர்.

இந்த சீசனில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த கவின் பங்கேற்றுள்ளார். கவின் அங்குள்ள பெண்களிடம் கடலை போடுவதையும் காதல் என கூறி அவர்கள் பின்னால் சுற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.


இதைத்தொடர்ந்து சாக்ஷியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறி காதலை வெளிப்படுத்தினார். இருவரும் பரஸ்பரம் காதலிக்கத் தொடங்கினர். அப்போது மனசை கட்டுப்படுத்தாமல் லாஸ்லியாவிடம் பறிகொடுத்தார் கவின்.


எப்போதும் லாஸ்லியாவிடம் கடலை போடுவது வழிவது சைட் அடிப்பது என இருந்து வருகிறார் கவின். இதனால் கடுப்பாகிறார் சாக்ஷி. இதனால் கவினுடன் பலமுறை சண்டை போட்டுவிட்டார் சாக்ஷி. அதையெல்லாம் காதில் வாங்காத கவின், உன்னோடு பேசியது பழகியது எல்லாம் டைம் பாஸ்க்குதான் என்று கூறிவிட்டார். 

எந்திரன் படத்தின் இன்டர்வெல் காட்சியில் வருவது போல இனிமே தான் கதையே ஆரம்பிக்க போகுது என்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். அதே போல, ஷாக்சியும் தொடர்ந்துகவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டு பொழந்துகட்டி வந்தார். இந்த கவினை முதலில் நாமினேட் செய்ததே ஷாக்சி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

இதற்கிடையில் கவின் ஷாகஷிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்தார் என்ற தகவல் வேறு. இந்நிலையில், நான் லாஸ்லியாவுடன் நட்பாகத்தான் பேசி வருகிறேன் வேற எதுவும் எங்களுக்குள் இல்லை என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். 

இதனை கேட்டு கேட்டு அலுத்துப்போன பிக்பாஸ் போட்டியாளர்கள் நைட்டு ரெண்டு மணி வரைக்கும் லாஸ்லியா கூட என்னடா பேச்சு உனக்கு..? இதை பார்த்த உன்னை லவ் பண்ண பொண்ணுக்கு இல்ல. ஒரு விலாங்கிற்கு கூட கோவம் வரும். ஷாக்சி-க்கு கோபம் வருவதில் நியாயம் உள்ளது என சுற்றி வழைத்துகொண்டு ஷாக்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி விட்டனர். இதோ, அந்த வீடியோ,
Blogger இயக்குவது.