பிக்பாஸ் போட்டியாளர்களை இரத்த காவு வாங்கும் கமல்ஹாசனின் அரசியல் நாடகம் - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்


தமிழ்நாட்டுல தண்ணீரே இல்லை. மக்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். இதில், பிக்பாஸ் வீட்டில் இந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் தேவையா..? என்று தனது எதிர்ப்பு அரசியலை ஏவி விட்டார் நடிகர் கமல்ஹாசன்.

கோடைகாலாத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் ஒன்று. அதுவும் குறிப்பாக சென்னை பகுதியில் மட்டும் அதீத குடிநீர் பஞ்சம். 


அதற்கு காரணம், அரசு தான் என முழக்கமிடும் எதிர்கட்சிகளுடன் இணைந்து கொண்டு நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய பங்கிற்கு பிக்பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்பாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்களை இரத்த காவு வாங்கி வருகிறார். 


முதலில், சாண்டியின் தவடா உடைந்து தையல் போட்டார்கள், இப்போது மதுமிதா தன் கையை தானே கிழித்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது இந்த நீச்சல் குள பிரச்னை. 

நீச்சல் குள பிரச்சனைகும் மதுமிதா தற்கொலை முயற்சிக்கும் என்ன காரணம் என்று கேட்கிறீர்களா..? தண்ணீர் இல்லை, கர்நாடககாரர்கள் போல வருணபகாவானும் தண்ணீரை தர மாட்டேன் என்கிறார் என்று மதுமிதா கிண்டலாக கூற, இதனை கேட்ட ஷெரின் கர்நாடக கார்களை ஏன் இழுக்குறீங்க என்று எகிற பிரச்னை வளர்ந்து ஷெரினுடன் ஆண் போட்டியாளர்களும் சேர்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி தமிழ்நாடு தமிழ்நாடு-ன்னு சொல்றல.. அப்போ தமிழ்நாட்டுக்காக உயிரை விடு என்று ஒரு போட்டியாளர் கூற, நான் தமிழ்நாட்டுக்கு உயிரையும் விடுவேன் என்று மதுமிதா கையை கீறிக்கொண்டிருக்கிறார். 

இந்த வீடியோ வெளியே வந்தால் கமல்ஹாசனின் அரசியல் ஆட்டம் கண்டுவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியை நிச்சயம் முடக்கி விடுவார்கள் என்று பயந்து கொண்டு மதுமிதாவை சமாதானப்படுத்துவது போல பாவலா செய்து கமல்ஹாசன் வழியனுப்பி வைத்துவிட்டார். 

லட்சம் லட்சமாக செலவு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துறீங்க..? திரும்புற பக்கமெல்லாம் குளிர்சாதன போட்டிகளில் FROOTI-யை அடுக்கி வைத்திருக்கிறீர்கள். ஆனால், அந்த நீச்சல் குளத்தில் ஒரு லாரி நீரை நிரப்ப உங்களிடம் 400 ரூபாய் இல்லையா..? என ரசிகர்கள் கமல்ஹாசனை நோக்கி கேள்வி எழுப்பி வருகிரார்கள். 

உங்களின் எதிர்ப்பு அரசியல் இரண்டு பேரை இரத்த காவு வாங்கியுள்ளது. இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள். நீச்சல் குளத்தில் நீரை நிரப்புங்கள். அல்லது, மண்ணை கொட்டி மூடி விடுங்கள். தண்ணீர் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி அரசின் மீது எதிர்ப்பை உருவாக்க நினைக்காதீர்கள் என்று அறிவார்ந்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனை வெளுத்துகட்டி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.