இப்படி ஆகிடுச்சே..! - கதறி அழுத நடிகர் சரவணன் - பிரபல நடிகர் உருக்கம்


பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு என்றோ செய்த தவறால் வீட்டை விடு வெளியேற்றப்பட்டவர் நடிகர் சரவணன். இது சரவணன் ரசிகர்களை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. 

தொலைகாட்சியில் கூறிய அந்த விஷயத்திற்கு தொலைகாட்சியிலேயே மன்னிப்பும் கேட்டார் சரவணன். ஆனால், பிக்பாஸ் அவர் போட்டியில் தொடர தகுதி அற்றவர் என கூறி அவரை அவமானப்படுத்தும் விதமாக வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டது. 


எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெள்ளந்தியாக வெளியே சொல்லி வந்த அவருக்கு இது ஒரு மிகப்பெரிய தண்டனை. இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர் நடிகர் பரணி சரவணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.


ஆரம்பத்தில் நன்றாகவே பேசிய சரவணன், திடீரெனே அழுதே விட்டாராம். எனக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் வரும் பணத்தை வைத்து புதிய வாழ்கை தொடங்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்படி ஆகி விட்டதே என ஓ.வென அழுதுள்ளார். இதனை உருக்கமாக பதிவு செய்துள்ளார் நடிகர் பரணி.You May Like
Powered by Blogger.