அட்லீஸ்ட் ஒரு பொண்ணுகிட்டயாவது கவினால் இப்படி இருக்க முடியுமா - ஷாக்சி விளாசல்


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அபிராமி வெளியேறுவதற்கு முன்னர் எலிமினேட் ஆனவர் நடிகை ஷாக்சி அகர்வால். 

பிக்பாஸ் வீட்டில் இவர் சீரியல் நடிகர் கவினை காதலித்து வந்தார். கவினும் பதிலாக காதலிப்பது போல் தான் சுற்றி வந்தார். பாத்ரூம் ஏரியாவில் ஷாக்சிக்கு கவின் முத்தம் கொடுத்தார் என்ற பேச்சும் இருந்தது.

இருந்தாலும் கடைசியில் சாக்‌ஷியை ஏமாற்றிவிட்டு லொஸ்லியா பக்கம் திரும்பினார். எப்படி இதனை செய்து விட்டு இப்படி மாறினாய்..? என்று பலமுறை பல இடங்களில் ஷாக்சி கூறினார். ஆனால், அப்படி என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த காட்சிகளை காட்டவும் இல்லை.


தொலைகாட்சியில் ஒளிபரப்ப முடியாத அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் என ரசிகர்கள் முனுமுணுத்து வந்தனர். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சாக்‌ஷி அதில், உண்மையை சொன்னால், நான் கவினை ஒரு நல்ல நண்பனாக கருதி வந்தேன். ஆனால் இனி இல்லை. ஒரு நண்பர் வேண்டுமென்றே உங்களை தாழ்த்தவோ அல்லது தீங்கு செய்யவோ மாட்டார். 


நான் மிக சரியானவள் என்று சொல்லவில்லை. குறைந்த பட்சம், அவர் விளையாடியதை போல நான் வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடவில்லை. என்னவாக இருந்தாலும், கவின் எனக்காக இருப்பார் என்று நினைத்தேன். நான் தவறு செய்த இடம் அதுதான். முதலில், அவர் என்னை மூளை சலவை செய்தார். 

இப்போது லொஸ்லியா. அட்லீஸ்ட் ஒரு பொண்ணுகிட்டயாவது கவினால் நேர்மையா இருக்க முடியுமா..? என விளாசியுள்ளார் ஷாக்சி.
Blogger இயக்குவது.