நடிகர் விஷாலை கைது செய்ய உத்தரவு - என்ன காரணம் - பரபரப்பு தகவல்கள்


இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத படி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 


நடிகர் விஷாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் தரப்பில் இருந்து எந்தவித சரியான பதிலும் வரவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும், இதுவரை அவர் ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது. 

இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை வரும் 28 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
Blogger இயக்குவது.