ஆண்ட்ரியா போல பாதிக்கப்பட்டு தில்லாக உண்மையை கூறிய தீபிகா படுகோனே..!
பிரபல தமிழ் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா திருமணம் ஆன நபருடன் உறவு வைத்துக்கொண்டதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் பிறகு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் தீபிகா படுகோனேவும் சமீபத்தில் மனஅழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் எனவும் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சமீபத்தில் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். மன அழுத்தத்துக்குள் நான் மூழ்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த நிலையில் இருந்து வெளியேற கடுமையாக போராடினேன். அந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற கையறு நிலையில் தவித்தேன்.
ஆனால், எனது அப்போதைய நிலையை போராடி வெல்லும் பலத்தை எனக்குள் இருந்த ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரிய ஆற்றல் ஊக்குசக்தியாக அமைந்தது. பேட்மின்டன் விளையாட்டு தெரிந்திருந்ததால் தோல்விகளை கையாள மட்டுமின்றி, வெற்றியை கையாள்வது எப்படி என்பதையும் விளையாட்டு கற்றுத் தந்தது. எனக்கு பணிவையும், அடக்கத்தையும் அது கற்றுத் தந்தது.
எந்த நிலையிலும் இருந்து மீள்வது எப்படி? எதையும் எதிர்த்து போராடுவது எப்படி? என்பதை கற்றுத் தந்ததுடன் அந்த ஊக்கம்தான் என்னை வழிநடத்தி செல்கிறது. எந்த துறையிலும் சிறந்தவராக விளங்க ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார்.
எனவே, ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். எனது வாழ்க்கையை மாற்றிய விளையாட்டு உங்களது வாழ்க்கையையும் மாற்றும் மேலும், மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சில சிகிச்சைகளையும் எடுத்துக்கொண்டேன் என கூறினார்.
நடிகை ஆண்ட்ரியா கூறியதை போலவே தானும் மன அழுத்தத்தில் இருந்து சிகிச்சை மூலம் மீண்ட கதையை கூறியுள்ள தீபிகா படுகோனேவின் இந்த பேச்சு தான் இப்போது பாலிவுட் உலகின் ஹாட் டாக்-காக உள்ளது.